சியாமகிருஷ்ணன்
பல்லவி
நாமசங்கீர்த்தனத்தை விரும்பிடும் கேசவனே
தாமரைப்பதம் பணிந்தேன் நீயெனக்கருள்வாய்
அனுபல்லவி
பாமர ர் பண்டிதரனைவரும் கூடி
தேமதுரத்தமிழால் பாடித்துதித்திடும்
சரணம்
பூமியில் உனையன்றி வேறோர் தெய்வம்
யாமறிந்தவரையில் எதுவுமில்லை
பூமகள் லக்ஷ்மியை மார்பினில் தாங்கும்
ச்யாமக்ருஷ்ணனே நீலவண்ணனே
No comments:
Post a Comment