நவநீதக் கண்ணன்
பல்லவி
தவறென்ன செய்தேன் தயாகரனே கேசவா
பவக்கடலில் கிடந்து அடிமை நானவதியுற
அனுபல்லவி
அவலொரு பிடிதந்த தோழனுக்கருளிய
நவநீதக் கண்ணனே பாராமுகமேனோ
சரணம்
தவறாமல் நாள் தோறும் உனது திருநாம ம்
கவனமுடன் ஓதித்துதித்ததனாலோ
விவரம் புரியாமல் பித்தாகியலைகின்றேன்
புவியரசே திருமாலே என்கவலை தீராயோ
No comments:
Post a Comment