திருவரங்கன்
பல்லவி
திருவரங்கம்தனில் துயிலும் திருமாலே கேசவா
கருணையுடன் எனைக்காக்க வேண்டுமெனத்துதித்தேன்
அனுபல்லவி
திருவரங்கநாயகியைத் திருமார்பில் வைத்திருக்கும்
அருமாகடலமுதே ஆராவமுதனே
சரணம்
வருந்துயரனைத்தையும் உனதருளாலே
எரிமுன்னர் வைத்தூறு போலவே அழித்திடும்
கருநீலவண்ணனே. வேணுகோபாலனே
இருவினைப்பயன் நீக்கி எனையாண்டருள்வாய்
No comments:
Post a Comment