கப்பிய கரிமுகன்
பல்லவி
அப்பமோடவல்பொரி அளித்துனைத் துதித்தேன்
சுப்பிரமணியன் தமையனே எனக்கருள்வாய்
அனுபல்லவி
துப்புரவுடனே அகம்புறம் துலக்கி
முப்போதுமுந்தன் திருவடி பணிந்தேன்
சரணம்
முப்பிறப்பில் யான் செய்த வினைப்பயன்கள்
இப்பிறப்பில் தொலைத்திட வேண்டுமென விரும்பி
ஒப்பிலாமணியே கேசவன் மருகனே
கப்பிய கரிமுகனே ஆனைமுகத்தோனே
No comments:
Post a Comment