அத்தனூர் அம்பிகை
பல்லவி
கனகமலைதனில் வீற்றிருப்பவளே
உனதடி பணிந்தேன் ஶ்ரீலலிதாம்பிகே
அனுபல்லவி
எனக்கொரு பிறவி இனிமேல் வேண்டேன்
மனங்கனிந்தருள்புரி கேசவன் சோதரி
சரணம்
தினகரன் சந்திரன் முனிவர்களிந்திரன்
அனைவரும் வணங்கிடும் திரிபுரசுந்தரி
வனதுர்கை காளி மகமாயி நீயே
புனித தலம் வளர் அத்தனூர் அம்பிகே
No comments:
Post a Comment