கருமுகில்வண்ணன்
பல்லவி
விரும்பியவர் விரும்பும் வரமளிக்கும் கேசவனே
கருமுகில்வண்ணனே கழலடி பணிந்தேன்
அனுபல்லவி
அருகினில் எனைக்கூட்டி ஆண்டிட வேண்டுமென
உருகி மனமார உனையே துதித்தேன்
சரணம்
வருந்துயரனைத்தும் நீ தரும் வரமென்று
கருதியேயதனை மனமார ஏற்றேன்
திருவின் நாயகனை தீனசரண்யனே
இருவினைப்பயன் நீக்கி எனைக்காத்தருள்வாய்
No comments:
Post a Comment