நான் நீ மாறி
நாமாவதெப்போது
வான்,நீர்,நிலம்,
வெளி, நெருப்பென்றும்
ஊன் உயிரெனும் பேதங்களெல்லாம்
தானதுவாகி
கலப்பதெப்போது
ஞானம் தேடும் நான்
ஓய்வதெப்போது
கேள்வி பதிலாகும்
நாள் எப்போது
கேட்கவே ராமகதை பேரின்பமனைவருக்கும்
பாட்டாக க்கவியாக பாராயணம் செய்து
அனுபல்லவி
நாட்டில் கேசவன் செய்த ஆட்சியிலதிசயங்கள்
மேட்டிமையுடனே லவகுசர்கள் பாடியதை
சரணம்
சாட்டியம் கைகேயி செய்து பெற்ற வரங்களும்
காட்டிலும் மேட்டிலும் அவன் பட்ட துன்பமும்
கோட்டைத் தாண்டிய சீதையின் துயர்களும்
காட்டிய பாடங்களும் காவிய நயங்களும்
நண்பர் வீட்டு எதிர் வீட்டில் ஒரு வயதான பாட்டி இருந்தார்.
அவர் மிகவும் தெய்வபக்தி வாய்ந்தவர். அவர் நண்பர் வீட்டாருடன்
சகஜமாகப் பழகவும் அவர் வீட்டுக்குழந்தைகளுக்கு சுலோகங்கள், சின்ன சின்ன
பக்திப்பாடல்களும் , நல்ல விஷயங்களும் ஓய்வு நேரங்களில் அன்புடன் சொல்லிக்
கொடுப்பார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நண்பரின் வீட்டுக்கு
விருந்தினர் ஒருவர் குடும்பத்துடன் வந்தார் . அவருக்கு துறுதுறு வென்று மிகவும்
அழகான மூன்று வயது மகளிருந்தாள். நிரம்ப சூட்டிகையான பெண். அவர் தன்
பெண்ணின் சாகசங்கள் மற்றும் பாடும் திறமை பற்றிப் பெருமையாகச் சொல்லிக்
கொண்டிருந்தார். அங்கு அப்போது எதிர் வீட்டுப் பாட்டியுமிருந்தார். பாட்டி வந்த
விருந்தினரிடம் " குழந்தை சாமிப்பாட்டெல்லாம் படறதுன்னு சொல்றேளே, ஒரு
சாமி பாட்டெ பாடச் சொல்லுங்கோ"என்றார். அவரும் மகளிடம் " பாட்டுக்கு
அந்த சாமிப்பாட்டப் பாடும்மா" என்றார். குழந்தையும் கணீரெனப் பாடியது!!!!!!
"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே அடியே (கல்யாணம்தான்..)"