தாமரைப் பாதனை....
பல்லவி
தாமரைப் பாதனை நீலவண்ணனை
தேமதுரத் தமிழால் தினம் பாடித்துதித்தேன்
அனுபல்லவி
காமனையீன்றவனை கம்சனை வதைத்தவனை
மாமறைகள் புகழும் மாதவனைக் கேசவனை
சரணம்
நிலையில்லா இவ்வுலகில் நிலையாக இருப்பவனை
அலைமகளைத் தன் மார்பில் அழகுடனே தரித்தவனை
மலைமகளின் சோதரனை ஆயர் குலவிளக்கை
நன்மங்கலம் தலத்தில். சிலையாக நின்றவனை
வாமனனாய் வந்து மூவடியாலுலகளந்த
கோமகனை கண்ணனை மாயனை மதுசூதனனை
ஆமருவியப்பனாய் ஆநிறை மேய்த்தவனை
பூமண்டலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment