பங்கய பதம்.....
பல்லவி
பங்கய பதம் பணிந்தேன் ஶ்ரீ ராமா
எங்கும் நிறைந்திருப்பவனே எனைக்காத்தருள்வாய்
அனுபல்லவி
சங்கும் சக்கரமும் சாரங்கமும் மற்றும்
மங்காத புகழ் மிகு கோதண்டமும் ஏந்துமுன்
சரணம்
திங்களைப் பழிக்கும் அழகு முகமுடையவனே
சங்கப் புலவர்களின் கவித்திறனை சோதிக்கும்
அங்க சௌந்தர்யம் நிறைந்த பேரழகனே
பொங்கரவணைதனில் துயிலும் கேசவனே
பங்கயநாபனே சங்கரன் நேசனே
வெங்கதிரோன் குலத்துதித்த தசரதராமனே
மங்காத புகழ் மேவும் அயோத்தி மன்னனே
பங்கயச்செல்வி சீதையின் நாயகனே
பொங்குமலை கடல் கடந்து இலங்கைமாநகர் சென்று
அங்கிருக்கும் தசமுகன் ராவணனை வென்று
சரணடைந்த வீடணனை அரசாள வைத்து
சிறையிருந்த ஜானகியை மீட்ட ராகவனே
இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கையடக்கி
பொங்கும் மூவாசைப் பிணிதனையே களைந்து
முங்கிடச்செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட
செங்கண் மால் நீயே துணையென நம்பியுன்
No comments:
Post a Comment