உதாசீனம்.....
பல்லவி
உதாசீனம் செய்வது ஏன் ராமா
சதா உனைத்துதிக்கும் ஏழையேன் எனையே
அனுபல்லவி
பதாரவிந்தமே கதியெனப் பணிந்தேனுன்
கதாம்ருதமே கேட்டு அனுதினம் ரசித்தேன்
சரணம்
நிதானம் தவறாத ஜானகி ராமனே
பதாம்புஜம் பணியும் பக்தருக்கருளபவனே
சுதாவெனும் அமுதை தேவருக்களித்தவனே
மதம் மொழி இனமெனும் எல்லை கடந்தவனே
சதாசிவனும் பார்வதி தேவியும்
நிதமும் போற்றுமுன் நாமமே ஜபித்தேன்
கதாதரனே திருமாலே கேசவனே
உதார குணத்துடன் எனை ஆண்டருள்வாய்
No comments:
Post a Comment