பத்திரகாளியின்....
பல்லவி
பத்திரகாளியின் பாதம் பணிந்தேன்
ருத்திரன் கேசவன் பிரமன் போற்றும்
அனுபல்லவி
மாத்தூர் திருத்தலத்தில் மாகாளியாகவும்
திருவேற்காட்டில் கருமாரியெனவிளங்கும்
சரணம்
வித்தும் விருட்சமும் சக்தியும் வேதமும்
புத்தியிலுறையும் ஞானமும் தெளிவும்
சித்தும் மாயையும் அனைத்துமாகி
யாதுமாகி நின்ற பராசக்தியின்
No comments:
Post a Comment