வானமுட்டிப் பெருமாள்
பல்லவி
அத்திமரத்தில் எழுந்தருளிக் காட்சி தரும்
வானமுட்டிப் பெருமாளைக் கேசவனைப்பணிந்தேன்
அனுபல்லவி
நித்தியம் துதித்திப்பவர் துயரங்கள் பிணிகள்
அத்தனையுமகற்றிடும் பக்தப்பிரியனை
சரணம்
கத்தும் கடல் நடுவே பள்ளி கொண்டிருக்கும்
உத்தமனை திருப் பாற்கடல் வாசனை
எத்திசையும் புகழ் விளங்கும் எட்டெழுத்தானை
வித்தகர் போற்றும் வைகுண்ட நாதனை
No comments:
Post a Comment