உள்ளம் கசிந்துருகி......
பல்லவி
உள்ளம் கசிந்துருகி உன்னையே பணிந்தேன்
பங்காரு காமாக்ஷி அன்னையே உமையே
அனுபல்லவி
எள்ளளவேனும் ஏழையேன் மீது
கருணை வைத்து கடைக்கண் பாரம்மா
சரணம்
பிள்ளையெந்தனை ஆண்டருள வேண்டுமென
மனமார உந்தன் திருநாமம் துதித்தேன்
தள்ளாமல் தாயே தயவளித்துக் காத்தருள்வாய்
பள்ளிகொண்ட திருமால் கேசவன் சோதரி
No comments:
Post a Comment