எனக்கருள......
பல்லவி
எனக்கருள உனக்கென்ன தயக்கம் ஶ்ரீ ராமா
மனமார உனையே அனுதினம் துதித்திடும்
அனுபல்லவி
தினகர குலத்தோனே மருப்பொசித்த கேசவனே
கனவிலும் நினைவிலும் உன் நாமமே நினைக்கும்
சரணம்
ஜனக்கனின் மருமகனே ஜானகி ரமணா
அனங்கனை விடவும் மேலான அழகனே
சந்திர முகத்தோனே சரத்கால மேகமே
இந்திரன் நரர்சுரர் பணிந்திடும் பொற்பாதனே
அனுமனும் அனந்தனும் கருடனும் நான்முகனும்
சனகாதி முனிவர்களும் வணங்கிடும் பதத்தோனே
சமுத்திர ராஜனின் கர்வம் தீர்த்தவனே
சிவதனுசை முறித்தவனே கருடவாகனனே
மக்களை நேசிக்கும் அயோத்தி மன்னனே
சக்கரக் கையனே சதுர்மறையும் பணிபவனே
வக்கிராசுரனை வதம் செய்தவனே
சக்கரவர்த்தித் திருமகனே ராகவனே
No comments:
Post a Comment