ஶ்ரீ ரகுராமனே.....
பல்லவி
ஶ்ரீ ரகுராமனே அரக்கர் குலமழித்தவனே
பாரினில் உனையன்றி வேறெனக்கு யாருளார்
அனுபல்லவி
ஆரணங்கின் மானம் காத்த ராகவனே
வாரணமழைத்ததும் உதவிய கேசவனே
சரணம்
நாரதர் நான்முகன் நரர்சுரர் பணிந்திடும்
நாரணனே சிவநேசனே பவநாசனே
தாரகராமா ஆராவமுதனே
பூரணமானவனே புவனேந்திரனே
மாரனும் காமுறும் பேரழகுடையவனே
நேரிழையாள் ஜானகியை மணமுடித்த ராகவனே
தேர் நடத்தியன்று சாரதியாய் நின்றவனே
கார்முகில் வண்ணனே பார் போற்றும் மன்னவனே
சூரியகுலத்தோனே சுடராழியானே
கூரம்பு தரித்தவனே கமலமலர்ப் பாதனே
பேரன்பு வைத்து பக்தரைக் காப்பவனே
மேரு மலையொத்தவனே அயோத்தியர் வேந்தனே
No comments:
Post a Comment