பாரினில்.....
பல்லவி
பாரினில் உனையன்றி கண்கண்ட தெய்வம்
வேறில்லை ஶ்ரீராமா எனைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
நேரில் நின்று தினமுனைத் துதித்தேன்
சூரிய குலத்தோனே சுக்ரீவன் தோழனே
சரணம்
கூரிய பாணங்கள் விடுவதில் வல்லவனே
நேரிழை சீதையை மணமுடித்த கேசவனே
தேரினை ஓட்டிய பார்த்தசாரதியே
மார்பினில் திருமகளை வைத்திருப்பவனே
ஓரிடத்தில் பிறந்து வேறிடத்தில் வளர்ந்தவனே
கோரின வரம் தரும் கோதண்டபாணியே
நாரதர் நான்முகன் நரர்சுரரிந்தின்
வீரமாருதி வணங்கிடும் பதத்தோனே
கோர அரக்கரை வதம் செய்தவனே
பூரண சந்திர முகப் பொலிவுடையவனே
சீரும் சிறப்பும் மிகு அயோத்தி மன்னனே
பார் புகழ் அழகனே பட்டாபி ராமா
No comments:
Post a Comment