வாய் திறந்து.....
பல்லவி
வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னாலே ராமா
நோய் வருமோ முத்து உதிர்ந்து விழுந்திடுமோ
அனுபல்லவி
சேய் எனக்கருள இன்னும் என்ன தயக்கம்
தாயினும் மேலான பரிவுடைய ரகுவரனே
சரணம்
ஆய்ப்பாடிதனில் பிறந்து லீலைகள் புரிந்தவனே
பேய் முலையுண்டவனே மாயவனே கேசவனே
தேய்பிறையே வாராத அம்புலி முகத்தோனே
தேயாத புகழ் மேவும் ஏரி காத்த ராமனே
No comments:
Post a Comment