தவறென்ன செய்தேன்......
பல்லவி
தவறென்ன செய்தேன் கோசலராமா
அவனியில் எனைக்காக்க தாமதம் செய்வதேன்
அனுபல்லவி
புவனம் போற்றும் உத்தமனே கேசவனே
தவயோகியர் முனிவர் வணங்கிடும் பாதனே
சரணம்
கவலை பிணியிடர் நீங்கிடச் செய்து
பவக்கடல் கடந்திட நீயே என்துணை
பவனகுமாரன் ஆஞ்சநேயனும்
சிவனும் கொண்டாடும் திருநாம முடையவனே
உனதடிமை நானெனப் பலமுறை சொன்னேன்
தினகரகுலத்தோனே செவியில் விழவில்லையா
அனைத்தும் நீயென உனைச்சரணடைந்தேன்
ஜனகனின் மருகனே எனை ஆண்டருள்வாய்
No comments:
Post a Comment