அச்சுதா......
பல்லவி
அச்சுதா அனந்தா கோவிந்தாவென்றே
இச்சையுடனழைத்தேன் கேசவா வருவாய்
அனுபல்லவி
பிச்சியென ஊரார் பழித்தாலுமஞ்சேன்
மெச்சியுனைப்பாடி மேனி சிலிர்த்தேன்
சரணம்
நச்சரவணைமீது துயிலும் நாராயணன்
நாமமொன்றே போதும் வேறு
எச்சுவை பெரினும் வேண்டேன்
கீர்த்திமிகு சென்னைமா நகருளானே
No comments:
Post a Comment