உனக்கிணை....
பல்லவி
உனக்கிணை வேறொரு தெய்வமுமுண்டோ
அனங்கனை மிஞ்சும் அழகுடைய ரகுராமா
அனுபல்லவி
தனமென ரகுகுலம் கொண்டாடும் தயைநிதியே
அனந்தசயனனே ஆதவகுலத்தோனே
சரணம்
முனிவர்கள் வேள்வியைக் காத்த ரகுவரனே
வனிதை பாஞ்சாலியின் மானம் காத்தவனே
சமுத்திர ராஜனின் கர்வம் தீர்தவனே
காகாசுரனின் கண் பறித்த ராகவனே
அரக்கரின் சிரம் கொய்த கோசலைபாலனே
மரவுரி தரித்து வனம் சென்ற மாதவனே
பரம்பொருள் நீயே பரிபூரணனே
விராதனை வதைத்த வீரத்திருமகனே
தாமரைக்கண்ணனே தாமரைநாபனே
மாமறைகள் போற்றும் மரகதவண்ணனே
கோமகள் சீதையின் மனங்கவர்ந்தவனே
பாமர ஜனங்களின் பாதுகாவலனே
அனுமனைத் தன்னருகில் எப்போதும் வைத்திருக்கும்
இனியனே கேசவனே தசரதன் மைந்தனே
தனுசொடித்து ஜனகன் மகளை மணந்தவனே
எனக்கருள வேண்டுமென உனையே துதித்தேன்
No comments:
Post a Comment