காக்க உனக்கு.......
பல்லவி
காக்க உனக்கு மனமில்லையா ராமா
சாக்கு போக்கு சொல்லி ஏனிந்த நாடகம்
அனுபல்லவி
வாக்கதிபதியின் பதியைப் படைத்தவனே
ஆக்கலழித்தல் காத்தல் புரிபவனே
சரணம்
தாக்குதல் செய்து அரக்கரை மாய்த்தவனே
தீக்குளிக்க வேண்டுமென சீதையைப் பணித்தவனே
பார்க்குமிடமெலாம் நீக்கமற நிறைந்தவனே
ஏக்கம் தீர்த்தெனை ஆண்டருள்வாய் கேசவனே
மாக்களும் முனிவரும் தேவரும் வணங்கிடும்
தேக்கு மர மேனியனே லாவண்ய ராமா
பூக்களைத் தூவியுன் பொன்னடி பணிந்தேன்
சீக்கிரமே வந்து எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment