நாராயணாவென்னும்....
பல்லவி
நாராயணாவென்னும் நாமமே போதும்
தீரா இடர் தீரும் திருவருள் சேரும்
அனுபல்லவி
ஓராயிரம் வேண்டாம் எதுவும்
பாராயணம் செய்ய வேண்டாம் (ஓம் நமோ)
சரணம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
வீரமாருதி வினதையின் புதல்வன்
சீரடியார் சென்ன கேசவன் இன்னும்
பாரோரனைவருமே போற்றித் துதிக்கும்
No comments:
Post a Comment