சகலரும்.....
பல்லவி
சகலரும் துதித்திடும் தேவாதி தேவனே
முகமலர் காண்பித்து அபயமளித்திடுவாய்
அனுபல்லவி
பகலவன் குலத்தோனே சாகேத ராமா
இகபரசுகங்களை தருபவன் நீயே
சரணம்
குகனைத் தோழனாய் கொண்ட கேசவனே
ககனமும் புவனமும் போற்றும் குணத்தோனே
நிகர் தனக்கில்லாத பெருமையுடைவனே
சகம் புகழும் ஶ்ரீ பட்டாபிராமனே
மகபதி ரதிபதி சரச்வதியின்பதி
உகந்து பணிந்திடும் ஶ்ரீபதியே
சிகரமெனத்திகழும் அயோத்தி மன்னனே
புகலிடம் நீயெனத் திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment