அருள்தரும்.....
பல்லவி
அருள் தரும் குமரா ஆறுமுகா
இருள் சேரென்மனம் ஒளிபெற வேண்டினேன்
அனுபல்லவி
திருவின் நாயகன் கேசவன் மருகனே
குருகுகனே உமையவள் மைந்தனே
சரணம்
மண்ணும் பெண்ணும் பொன்னும் பொருளும்
எண்ணியே வீணே வாழ்நாளைக் கழித்தேன்
புண்ணியம் நற்கருமம் எள்ளளவும் செய்திலேன்
சண்முகனே மனம் திருந்தி உன்னைப் பணிந்தேன்
No comments:
Post a Comment