கேசவன்.....
பல்லவி
கேசவன் திருநாமமே தினம் கேட்கவே பேரின்பமே
ஈசனவன் நாமமே நாம் அனுதினம் உரைத்திடுவோம்
துரிதம்
வாசமலர் தூவி நேசமுடன் பூசித்தால்
பாசத்தளை களைந்து மோட்சமளித்திடுமந்த
சமஷ்டி சரணம்
பேசும் தெய்வமெனத் திருவேங்கடந்தன்னில்
தேசுடன் வீற்றிருக்கும் தேயாத புகழ் மேவும்
வாசன் கோவிந்தராசன் பத்மாவதி நேசன்
மாசிலாத்திருமகளைத் தன் மார்பில் தாங்குமந்த
No comments:
Post a Comment