தயவளிக்கக் கூடாதா.......
பல்லவி
தயவளிக்கக் கூடாதா தயரதன் மைந்தனே
அயராதுனையே தினம் துதிக்குமெந்தனுக்கு
அனுபல்லவி
கயல்விழி சீதையின் கரம் பிடித்த கேசவனே
பயமெனும் சொல்லறியா பட்டாபிராமனே
சரணம்
புயலென அரக்கரை விரட்டிடும் சூறாவளியே
அயர்வறும் அமரர்கள் துதித்திடுமதிபதியே
துயர் துடைக்கும் புண்ணியனே தூயவர் நேயனே
ஜெயமென்னும் சொல்லின் பொருளே இலக்கணமே
வியக்க வைக்கும் பேரழகுடயவனே கிரிதரனே
அயனையும் காமனையும் திசைகளையும் படைத்தவனே
நயனத்தாமரையால் அடியார்க்கருள்பவனே
உயர் நலமுடையவனே உத்தமனே ராகவனே
நயமுடன் மறையோதும் முனிவர்கள் வணங்கிடும்
புயபலம் படைத்த கோதண்ட ராமனே
கயிலை நாதன் உமாபதி நேசனே
வயிரத்தை விடவும் மேலான செல்வமே
No comments:
Post a Comment