காயத்ரி தேவி........
பல்லவி
காயத்ரி தேவி உன்னைப் பணிந்தேன் (ஶ்ரீ)
வேயுருதோளிபங்கன் கௌளேச்வரர் போற்றும்
துரிதம்
கணபதி முருகன் நாரதர் நான்முகன் சுகசனகாதியர் அமரேந்திரனும்
கணங்களும் தேவரும் தேவியர் மூவரும் கேசவன் மற்றும்
அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
சேயென வேதங்கள் நான்கையும் அரவணைத்து
தாயெனக் காத்தருளும் மந,திரப் பொருளே
சரணம்
தேயாத புகழ் மேவும் கைலாசக் கோணையிலே
நாயகியாய் மாமேருவிலமர்ந்திருக்கும் மாயே
தீயாரை மாய்த்து நல்லாரைக் காப்பவளே
ஓயாதுனைத் துதிக்கும் அடியார்க்கருளளிப்பவளே
No comments:
Post a Comment