பதம் பணிந்தேன்.....
பல்லவி
பதம் பணிந்தேன் தாயே மயூரவல்லி
நிதம் துதித்திடும் எனக்கருள் தரவேண்டி
அனுபல்லவி
இதம் தரும் ஆதிகேசவன் மணிமார்பில்
பதமுடன் வீற்றிருக்கும் பங்கயமே உந்தன்
சரணம்
என்றும் திருமால் மனம் மகிழ
முன்னம் பாற்கடலருளிய இன்னமுதே
உன்னருள் வேண்டி சங்கரர் துதித்ததும்
பொன்மழை பொழிந்த பூமகளே
No comments:
Post a Comment