மதுரகாளியை...
பல்லவி
மதுரகாளியை மனமாரத்துதித்தேன்
பதுமையென சிறுவாச்சூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
அனுபல்லவி
சதுர்முகனும் தேவர்களும் இந்திரனும் முனிவர்களும்
சதுர்மறையும் போற்றும் கேசவன் சோதரியை
சரணம்
கதிரவன் ஒளியையும் மிஞ்சும் ஒளியுடையவளை
மதி முகத்தாளை மலரேந்தும் கரத்தாளை
ரதிமதனும் மயங்கும் வடிவுடையாளை
அதிசயமானவளை ஆதிபராசக்தியை
No comments:
Post a Comment