தாமரை மலர்ப்பதம்....
பல்லவி
தாமரை மலர்ப்பதம் பணிந்தேன் காமாக்ஷி
காமகோட்டம்தனில் வீற்றிருக்கும் உன்றன்
துரிதம்
காமன் கந்தன் கணபதி இந்திரன்
நந்தி கணங்களனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
பூமகள் நாமகள் நான்முகனுடனே
மாமறைகளும் போற்றும் ஏகாம்ப்ரேச்வரி
சரணம்
ஓமெனும் மந்திரத்தினுட்பொருளாய் விளங்கி
மாமேருவிலமர்ந்திருக்கும் ராஜராஜேச்வரி
காமாதியறுபகை யகலவேண்டுமென
நாமமே துதித்தேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment