சரணம்....
பல்லவி
சரணம் சரணம் சரணம் ஶ்ரீ ராமா
அரனயனும் பணியும் பரம புருஷனே
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் மாயையில்லாத
பரம் பொருளே கேசவனே பாற்கடல் வாசனே
சரணம்
கரதூஷணாதியரை வதைத்த ராகவனே
அரக்கன் ராவணனின் கர்வம் அழித்தவனே
சரத்காலமேகமே நரநாராயணனே
கரம் பணிந்துனையே அனுதினம் துதித்தேன்
No comments:
Post a Comment