அச்சுதன்
பல்லவி
அச்சுதானந்த கேசவா உனை
மெச்சியே பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
நச்சரவணையில் பள்ளிகொண்டிருக்கும்
நாராயணா ஶ்ரீ தாமோதரா
சரணம்
துச்சமாய் லட்சங்கள் வாரிக்கொடுத்தாலும்
அச்சுவெல்லப்பாயாசம் படையல் செய்தாலும்
இச்சகம் பேசி இழிச்செயல் புரிந்திடும்
பிச்சி மாந்தருக்கு உன்னருளேது
No comments:
Post a Comment