தாமரைமலர்ப்பாதனே
பல்லவி
தாமரை மலர்ப்பாதனே கேசவா
மாமறைகள் போற்றும் யாதவகுல திலகா
அனுபல்லவி
பாமரஜனங்களை காத்தருள்பவனே
பாமாருக்மிணி அன்புடன் பணிந்திடும்
சரணம்
பூமியும் வானமும் நீரும் நெருப்பும் காற்றும் நீயே
வாமனனாய் வடிவெடுத்து மூவடியாலுலகளந்தாய்
தீமையே வடிவான கம்சனை வதம் புரிந்தாய்
தேமதுரத்தமிழால் உனைப்பாடிப் பணிந்தேன்
No comments:
Post a Comment