பாதாம்புஜம் பணிந்தேன்
பல்லவி
பாதாம்புஜம் பணிந்தேன் கேசவா
ஆதாரம் நீயே அகிலமனைத்திற்கும்
அனுபல்லவி
வேதாகமங்கள் சாத்திரங்கள் போற்றும்
பாதா சகலலோக நாதா காத்தருள்வாய்
சரணம்
நீதான் கதியென்றே நம்பியுனைத் துதித்தேன்
மாதா மகாலக்ஷ்மி மனங்கவர் மாதவனே
கீதோபதேசம்தனை உலகிற்களித்தவனே
யாதவகுல திலகா ஶ்ரீவாசுதேவா
No comments:
Post a Comment