நன்மங்கலம் நீலவண்ணன்
பல்லவி
உன்னை நினைந்துருகும் என்னைக்காத்தருள
இன்னும் என்ன தயக்கம் கேசவா
அனுபல்லவி
பன்னகசயன்னே பரமதயாளனே
நன்மங்கலம் வளர் நீலவண்ணனே
சரணம்
கன்றின் பசியறிந்து பாலூட்டும் பசுவென்று
உன்னடியார் உனைப் புகழும் மொழியும் பொய்யோ
அன்று நீ கரிக்கபயம் அளித்த கதையும் பொய்யோ
இன்று உனதடிமை மன்றாடி வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment