முருகையா
பல்லவி
பதமலர் பணிந்தேன் முருகையா
சதமென உனையே அனுதினம் துதித்து
அனுபல்லவி
வதம்செய்து சூரன் உடல்தனைக் கிழித்து
சேவலும் மயிலுமாயாட்கொண்ட குமரா
சரணம்
இதம் தரும் இவ்வுலக வாழ்வென்றும் நிலையல்ல
விதம் விதமான உறவும் சுற்றமும்
எதுவும் சதமல்ல என்றே ஏழையேன்
பதுமநாபன் கேசவன் மருகா
No comments:
Post a Comment