அரி நாராயணா
பல்லவி
மனமுந்தன் திருவடியை மறவாதிருக்கவே
தினமுந்தன் திருநாமம் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
அனல் புனல் காற்று நிலம் வெளியனைத்தும்
அனந்தனே கேசவா நீயென்றறிந்தேன்
சரணம்
எனதுயிருடலனைத்தும் உனது பொருளன்றோ
முனைப்புடன் பேணுவதும் உன்கடமைதானன்றோ
வினைப்பயனால் துன்பமுறும் எனைக்காக்க வேண்டுமென்றே
உனை வேண்டி நின்றேன் அரி நாராயணா
No comments:
Post a Comment