சிதம்பரநாதன்
பல்லவி
வெட்டவெளியாய் ஆகாசமாய் விளங்கும்
சட்டநாதனை சிதம்பரத்தைத் துதித்தேன்
அனுபல்லவி
அட்டதிக்பாலகரும் பிரமனும் தேவரும்
நந்தியும் கணங்களும் வணங்கிடும் ஈசனை
சரணம்
வட்டநிலாவின் ஒருகலையணிந்தவனை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனை
அட்ட மூர்த்தியைக் கேசவன் நேசனை
மட்டவிழ் மலர் தூவிப் பாதம் பணிந்து
No comments:
Post a Comment