பரவாசுதேவன்
பல்லவி
பரமதயாளனே கேசவா உனது
அரவிந்த பதம்தனை சரணடைந்தேன்
அனுபல்லவி
அரனயன் நரர் சுரர் சுகசனகாதியர்
கரம்பணிந்தேத்தும் கருணாமூர்த்தியே
சரணம்
வரம் தரும் கரமும் அபயகரமும் நீட்டும்
பரந்தாமனே பரமபுருஷனே
அரக்கர் குலமழித்து அவனியைக்காத்திடும்
பரவாசுதேவனே பாற்கடல் வாசனே
No comments:
Post a Comment