திருமலைவாசா
பல்லவி
சர்வமும் நீயே கோவிந்தா
தர்மம் தழைக்கும் திருமலைவாசா
அனுபல்லவி
அர்ச்சையாய் நின்று பக்தருக்கருளும்
கற்பகத்தருவே திருமாலே கேசவா
சரணம்
கர்மவினைப்பயனால் கட்டுண்டு இவ்வுலகில்
நிற்கதியாய் நிற்கும் எனக்கருள வேண்டுமென
அற்புதமே உந்தன் பொற்பதம் பணிந்தன்
நற்கதி அளித்தெனை ஆண்டருள்வாய்
No comments:
Post a Comment