சாரங்கன்
பல்லவி
சதா சாரங்கன் பாதம் பணிந்தேன்
அமுதளித்தெனையே ஆண்டருள வேண்டுமென
அனுபல்லவி
கதாதரன் உதாரசீலன்
பிதாவும் மாதாவும் குருவும் அவனென
சரணம்
தாயினும் பரிவுடன் கருணையளித்திடும்
மாயன் கேசவனை மனமாரத் துதித்து
மாயையாலுலகினை சதமென நினைத்திடும்
நோயினைத்தீர்த்தெனக்கு முக்தியளித்திட
No comments:
Post a Comment