ஶ்ரீ ரங்கநாதன்
பல்லவி
ஶ்ரீரங்கநாதனை நாளும் பணிந்தேன்
கோரசம்சாரக்கடலினைக் கடந்திடவே
துரிதம்
கோரினவரங்களைத் தருபவன் கேசவன்
கோவர்த்தனம்தனைக் குடையெனப் பிடித்தவன்
அனுபல்லவி
ஶ்ரீரங்கநாயகி மனங்கவர் நாயகன்
சாரங்கன் சாதுஜனங்களைக் காப்பவன்
சரணம்
சாரதியாய் நின்று பார்த்தனுக்குதவிய
ஆராவமுதன் அனந்தபத்மநாபன்
பாரிலொரு வைகுண்டம் என்னும் புகழ் விளங்கும்
சீர்மல்கும் திருவரங்கம் திருத்தலத்தில் பள்ளிகொண்ட
No comments:
Post a Comment