கேசவ மாதவ முரளீதரா
பல்லவி
கேசவ மாதவ முரளீதரா
நேசமுடன் என்னைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
பாசத்தளைகளை களைந்திடும் அச்சுதா
பாதம் பணிந்தேன் பாற்கடல்வாசா
சரணம்
வாசமலர் மாலைகள் வனமாலை கௌஸ்துபம்
ஆசையுடன் அணிந்திடும் பதுமநாபனே
மாசிலாமணியே மதுசூதனனே
பேசும் தெய்வமே கலியுகக்கடவுளே
No comments:
Post a Comment