ஶ்ரீ ஆதிகேசவன்
பல்லவி
ஆதிகேசவன் பாதம் பணிந்தேன்
மயூரவல்லி அருகிருந்து துதித்திடும்
அனுபல்லவி
மேதினி போற்றும் உடையவருடனிருக்கும்
உலகளந்த தாடாளன் மதுசூதனன் - ஶ்ரீ
சரணம்
வேதியரோதிடும் மறைகளின் பொருளவன்
சோதியாய் சுடராய் ஒளியாயிருப்பவன்
பாதிமதி சூடும் அரனும் பிரமனும்
தீதறியா முனி நாரதரும் பணிந்திடும்
No comments:
Post a Comment