அழைத்தாலே போதும்
பல்லவி
அழைத்தாலே போதும் கண்ணெதிரில் வருவான்
மழையாக அருள்பொழிவான் கேட்டவரம் தருவான்
அனுபல்லவி
கழல் தொழுது மெய்யுருகி உளமார நினந்து
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
சரணம்
பூவில் வாசமாய் தேனில் சுவையாய்
நாவில் சொல்லுமாய் சொல்லின் பொருளாய்
சீவனாய்ப் பரமனாய் ஒளியாய் வளியாய்
தேவனாயனைத்துமாய் இருக்கும் கேசவனை
No comments:
Post a Comment