வேங்கடரமணன்
பல்லவி
கழலடி நிழலே துணை என்றும்
அழகன் வேங்கடரமணனின் கருணை
அனுபல்லவி
குழலூதி மனங்களைக் கொள்ளை கொண்டவன்
ஏழுமலைவாசன் கோவிந்தன் கேசவன்
சரணம்
அழலேந்தும் நெற்றிக்கண்ணனும் பிரமனும்
குழுமி நிற்கும் தேவரும் சனகாதிமுனிவரும்
முழுமதியும் கதிரவனும் நாரதரும் மூவுலகும்
தொழுதேத்தும் கடல்வண்ணன் ஶ்ரீநிவாசன்
No comments:
Post a Comment