நன்மங்கலம் நீலவண்ணன்
பல்லவி
அன்புடனே என்னை ஆண்டருள் கேசவா
நன்மங்கலம் வளர் நீலவண்ணக்கண்ணனே
அனுபல்லவி
அன்னைதந்தை ஆசானும் தோழனும் நீயே
இன்பம் கூட்டித் துன்பம் களைந்து
சரணம்
அன்று அமரருக்கு அமுதம் அளித்தாய்
கன்றுகள் மேய்த்திடும் கண்ணனாயவதரித்து
குன்றுதனையேந்தி குவலயம் காத்தாய்
இன்றும் கருணையுடன் என் முன்னே தோன்றி
No comments:
Post a Comment