கண்ணன் கழலடியை
பல்லவி
கண்ணன் கழலடியைப் பற்றிடும் அடியார்கள்
திண்ணமாயெய்துவர் வைகுண்டம் பரமபதம்
அனுபல்லவி
எண்ணமும் செயலும் மனமும் ஒரு நிலையாக
கண்ணாலும் கருத்தாலும் அவனருளைப் பெறவேண்டி
சரணம்
மண்ணில் பிறந்துழலும் மாந்தரனைவரும்
விண்ணுலகத்திந்திரரும் தேவரும் முனிவரும்
தண்மதியும் கதிரவனும் போற்றித்துதித்திடும்
வண்புருடோத்தமன் கேசவன் மாதவன்
No comments:
Post a Comment