மகாவிஷ்ணு
பல்லவி
மகாலக்ஷ்மியை மார்பில் வைத்திருக்கும்
மகாவிஷ்ணுவை வணங்கித் துதித்தேன்
அனுபல்லவி
மகாபாபங்கள் முன்வினைப் பயன்கள்
அகன்றிடச் செய்து காத்தருள்வாயென
சரணம்
சகாதேவனைப் போலவே அன்புடன்
விகாரமில்லா மனத்துடன் துதிப்பவர்
சுகானுபவம்தனை அடைந்திடச் செய்திடும்
மகானுபாவனை மாலனைக் கேசவனை
No comments:
Post a Comment