கேசவன் ப்ரியசகி
பல்லவி
பங்கயநாபன் கேசவன் ப்ரியசகி
மங்களம் தந்திடும் மகாலக்ஷ்மி
துரிதம்
திங்கள் கதிரவன் தேவர்கள் முனிவர்கள்
அரனயன் நாரதர் இந்திரன் துதித்திடும்
அனுபல்லவி
சங்கடம் களைந்தெனை ஆண்டருள்வாயென
அங்கம் புழுதிபட உன் பதம் பணிந்தேன்
சரணம்
பங்கயபதத்தினளே பரமதயாகரி
சங்கரி சரஸ்வதி பணிந்திடும் பார்கவி
எங்கும் எதிலும் நிறைந்திருப்பவளே
தங்கும் நிதியளிக்கும் தாயே தனலக்ஷ்மி
No comments:
Post a Comment